தை.அ. குடும்பம்

இத்தகைய ஒரு சமுதாய தொண்டருடைய குடும்ப பாரம்பரியத்தை அறிய விரும்புதல் இயல்பான ஒன்றாகும். மார்க்க சேவையை தனது மூச்சாக கொண்டு வாழ்ந்த வெள்ளை அஹ்மத் லெப்பை ஆலிம், மாப்பிளை லெப்பை ஆலிம் லெப்பை அவர்களின் பேரனாகவும், அல்ஹாஜ் தை.ஆ.செ.அப்துல் காதர் பிறந்தார். இவருடைய தந்தை பெயர் தை. அப்துல் ஹமித் ஆலிம் என்பதாகும்.
அப்துல் ஹமித் ஆலிம் அவர்கள் பல தைக்காகளை- பாடசாலைகளை கட்டுவதற்கு உறுதுணையாக  இருந்ததின் காரணமாக அவர் தையன்னா என தைக்கா என்றும் சிறப்பாக அழைக்கப்பட்டார். அவருடைய குடும்பம் தைக்கா குடும்பம் என அழைக்க படுகிறது. தைக்கா என்ற எழுது இன்னும் அவர்தம் மரபிலே பிரகாசித்து கொண்டு இருக்கிறது. அப்துல் ஹமித் ஆலிம் மார்க்க சேவைகளை இயற்றியதுடன், வணிப துறையிலும் ஊக்கத்துடன் உழைத்தார். ராமநாதபுரம் மகாராஜா சேதுபதி அவர்களிடம் தர்காஸ்-குத்தகை எடுத்து நெல் வியாபாரத்தை பெரிதாக செய்து வந்து இருக்கிறார்.
அத்துடன் இலங்கையில் தமது வாணிபத்தை விரிவுபடுத்தினார். கொழும்பு, குருநாகல் ஆகிய இரு பெரு நகரங்களிலும் அவர் துணி  கடைகளை சிறப்பாக நடத்தினார். அவர் சித்தி பாத்துமா எனும் பெண்மணியை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு நான்கு மகன்களும், ஒரு மகளும் பிறந்தனர். அவர்களில் ஒருவரான அப்துல் காதர் அவர்கள் கீழகரையில் 1924 ஆம் ஆண்டு ஜூலை மாதம்  10 ஆம் நாளன்று பிறந்தார். அப்துல் ஹமித் ஆலிம் தம்பதிகளின் மூத்த மகனான அப்துல் ஜப்பார் சாஹிப் என்பது பெயர். அவர் பல்லாக்கு ஒலி நாயகம் அவர்களின் மருமகளை திருமணம் செய்து கொண்டார். அடுத்தவரான அப்துல் ஹலீம் சாஹிப், அஹ்மத் ஜலாலுதீன் அவர்களின் மகளை திருமணம் செய்து கொண்டார். மூன்றாவது மகனான அஹ்மத் மொய்தீன் வள்ளல் என பெயர் பெற்ற வாப்பா சாஹிப் மரைகாயர்  மகளை திருமணம் செய்து கொண்டார். அப்துல் காதர் அத்மகனி என பெயர் பெற்ற சயீத் அஹ்மத் கபீர் ஆலிம் அவர்களின் சகோதரரான ஜாபர் சாதிக் ஆலிம் அவர்களின் மகளான ஜைனப் அவர்களை திருமணம் செய்துள்ளார்.
அப்துல் காதர் ஓரேஒரு சகோதரி ஹதீஜா பீவி அவர்கள் கீழகரையில் வியாபார தந்தை என்ற பெயருடன் திகழும் முஹம்மத் இத்ரிஸ் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப் பட்டர். முதன் முதலாக வியாபார நிமதமாக அமெரிக்கா விற்கு சென்று புகழ் பெற்றவர் இத்ரிஸ் சாஹிப் என்பது குறிப்பிட தக்கது.
அல்ஹாஜ் அப்துல் காதர் தம்பதிக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளார்.

 

வாணிபத் துறை

வாணிபத் துறையில் நாட்டம் கொண்டு 1940 ஆம் ஆண்டில் இலங்கை கு சென்ற அப்துல் காதர் முதன் முதலில் மாணிக்க கல் வியாபாரத்தில் ஈடுபட்டார். இத்துறையில் ஆறு ஆண்டுகள் அனுபவம் பெற்ற பிறகு, சங்கு வியாபாரத்தில் பின்னர் ஈடுபட்டார். சங்கு தொழில் ஐந்து ஆண்டுகள் அனுபவம் பெற்ற பின்னர் தமது வாணிப முயற்சியை முத்து வியாபாரத்திற்கு விரிவுபடித்தினார். இலங்கையில் சிலாபத் துறையிலும், தமிழகத்தில் தூத்துக்குடி இல் குத்தகைகளை எடுத்து பல ஆட்களை வைத்து பெரும் அளவிலே நடத்தினார்.

பலருக்கு நிரந்தரமான தொழில் கொடுக்கும் வாய்ப்புள்ள தொழில் ஒன்றினை தொடங்க வேண்டும் என்று எண்ணினார். மாணிக்கம்-சங்கு-முத்து ஆகிய வணிக துறைகுலடன் எத்தைகைய தொடர்பும் அற்ற அச்சக தொழிலில் ஈடுபட துணிந்தார். அவர் பிறந்த ஊரான கீழகரையில் 1961  ஆம் ஆண்டில் TAS அச்சகம் என்ற பெயரில் ஓர் அச்சகத்தை நிறுவினார். இவ்வாறு அச்சு தொழிலில் ஒரு ஆண்டு அனுபவம் பெற்ற பின்னர், தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை இல் இதே பெயருடன்  பெயருடன் மற்றும் ஒரு அச்சகத்தை ஆரம்பித்தார். இவ்விரண்டு நிறுவனங்களும் பலருக்கு நிரந்தர வேலை கொடுக்க வேண்டும் என்ற அவரது எண்ணத்தில் தொடங்கப்பட்டது ஆகும்.  

நூல் வெளியீடு   


Published in: on ஒக்ரோபர் 31, 2008 at 8:32 முப  பின்னூட்டமொன்றை இடுங்கள்  

அல்லாமா கரீம் கனி

Published in: on ஒக்ரோபர் 31, 2008 at 3:34 முப  பின்னூட்டமொன்றை இடுங்கள்  

ஹைதராபாத் நிஜாம் உஸ்மான் அலி கான் 1911-1948

Published in: on ஒக்ரோபர் 10, 2008 at 3:06 முப  பின்னூட்டமொன்றை இடுங்கள்  

ஹைதராபாத் நிஜாம் மெஹ்புப் அலி கான் 1869-1911

Published in: on ஒக்ரோபர் 10, 2008 at 3:02 முப  பின்னூட்டமொன்றை இடுங்கள்  

ஹைதராபாத் நிஜாம் கமர் உதீன் கான் 1720-1748

Published in: on ஒக்ரோபர் 10, 2008 at 2:54 முப  பின்னூட்டமொன்றை இடுங்கள்  

நவாப் முஹம்மது அலி கான் வலாஜா 1717–1795

Published in: on ஒக்ரோபர் 10, 2008 at 2:41 முப  பின்னூட்டமொன்றை இடுங்கள்  

வள்ளல் சீதகாதி நினைவிடம்

Published in: on ஒக்ரோபர் 10, 2008 at 1:55 முப  பின்னூட்டமொன்றை இடுங்கள்  

திருப்பூர் மொய்தீன்

Published in: on ஒக்ரோபர் 7, 2008 at 8:05 பிப  பின்னூட்டமொன்றை இடுங்கள்  

நவாப் அஸுப் உத் தௌலா

Published in: on ஒக்ரோபர் 2, 2008 at 2:28 முப  பின்னூட்டமொன்றை இடுங்கள்  

குஞ்சாலி மரைகாயர்

Published in: on செப்ரெம்பர் 29, 2008 at 12:31 முப  பின்னூட்டமொன்றை இடுங்கள்